ஜோ ரூட் 9000 ரன்

Spread the love


9000 ரன்

இங்கிலாந்தின் ஜோ ரூட், தனது 113வது ரன்னை கடந்த போது டெஸ்ட் அரங்கில் 9000 ரன் என்ற மைல்கல்லை எட்டினார். இவர், 117 டெஸ்டில் இந்த இலக்கை அடைந்தார். தவிர, டெஸ்டில் 9 ஆயிரம் ரன் எடுத்த 2வது இங்கிலாந்து, 16வது சர்வதேச வீரரானார். ஏற்கனவே அலெஸ்டர் குக் (12472 ரன்) இந்த ரன்னை கடந்தார்.

* குறைந்த வயதில் 9 ஆயிரம் ரன்னை எட்டிய வீரர்கள் பட்டியலில் இந்திய ஜாம்பவான் சச்சினை (30 ஆண்டு, 253 நாட்கள்) முந்தி 2வது இடம் பிடித்தார் ஜோ ரூட் (30 ஆண்டு, 227 நாட்கள்). முதலிடத்தில் அலெஸ்டர் குக் (30 ஆண்டு, 159 நாட்கள்) உள்ளார்.

* டெஸ்ட் அரங்கில் அறிமுகமாகி குறைந்த நாட்களில் (3167) 9 ஆயிரம் ரன் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார் ஜோ ரூட். அடுத்த இரு இடங்களில் குக் (3380 நாட்கள்), இந்தியாவின் டிராவிட் (3661) உள்ளனர்.

 

22 சதம்

அபாரமாக ஆடிய ஜோ ரூட், தனது 22வது சதமடித்தார். இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் அதிக சதமடித்த இங்கிலாந்து வீரர்கள் பட்டியலில் 3வது இடத்தை வாலி ஹம்மன்ட், கோலின் கவுட்ரி, ஜெப்ரி பாய்காட், இயான் பெல் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார். முதலிரண்டு இடங்களில் அலெஸ்டர் குக் (33 சதம்), கெவின் பீட்டர்சன் (23) உள்ளனர்.

 

5வது சதம்

ஜோ ரூட், இந்த ஆண்டு 5வது சதமடித்தார். இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் ஒரு சீசனில் அதிக சதமடித்த இங்கிலாந்து கேப்டன் ஆனார். இதற்கு முன், கிரஹாம் கூச் (1990), மைக்கேல் ஆதர்டன் (1994), ஆன்ட்ரூ ஸ்டிராஸ் (2009) தலா 4 சதமடித்திருந்தனர்.

 

38 சர்வதேச சதம்

டெஸ்டில் 22 சதமடித்துள்ள ஜோ ரூட், ஒருநாள் போட்டியில் 16 சதம் விளாசினார். ஒட்டுமொத்தமாக 38 சதமடித்துள்ள இவர், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதமடித்த இங்கிலாந்து வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை அலெஸ்டர் குக் (டெஸ்டில் 33, ஒருநாள் போட்டியில் 5) உடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

 

8 ஆண்டுகளுக்கு பின்…

நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியை தொடர்ந்து லார்ட்ஸ் டெஸ்டிலும் ஜோ ரூட் சதமடித்தார். இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் 8 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஒருவர் அடுத்தடுத்த டெஸ்ட் இன்னிங்சில் சதம் விளாசினார். கடைசியாக 2013ல் நடந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தின் இயான் பெல் இப்படி சதமடித்திருந்தார்.

* தவிர ரூட், முதன்முறையாக அடுத்தடுத்த டெஸ்ட் இன்னிங்சில் சதமடித்துள்ளார்.

Advertisement





THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: