ஜெர்மனியில் COVID-19 தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கும் BioNTech

Spread the love

BioNTech மருந்தாக்க நிறுவனம், ஜெர்மனியில் தனது COVID-19 தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

COVID-19 தடுப்பூசிகளில் நவீன mRNA-வகைத் தொழில்நுட்பத்தைப் புகுத்திய முன்னோடி நிறுவனம் அது.

ஜெர்மனியைத் தளமாகக் கொண்டு செயல்படுகிறது BioNTech நிறுவனம்.

மனிதர்களிடம் நடத்தும் சோதனைகளுக்காகச் சிறிய அளவில்தான் அது இதுவரை தடுப்பூசிகளை உற்பத்தி செய்துள்ளது.

பெரிய அளவில் தடுப்பூசிகளை உற்பத்தி செய்து சந்தைப்படுத்திய அனுபவம், அந்த நிறுவனத்துக்கு இதுவரை இல்லை.

இப்போது அது 400 ஊழியர்களோடு பெரிய அளவில் COVID-19 தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.

மார்பர்க் நகரில் அமைந்துள்ள தடுப்பூசி உற்பத்தி ஆலை, அண்மையில்தான் செயல்படத் தேவையான உரிமத்தைப் பெற்றது.

தடுப்பூசிகளைச் சிறிய அளவில் உற்பத்தி
செய்வதற்கும் பெரிய அளவில் உற்பத்தி செய்வதற்கும் அதிக வித்தியாசம் உண்டு.

தடுப்பூசி உற்பத்தியின் தொடக்கம்முதல் முடிவுவரை, சுமார் 50,000 தனித்தனி நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டும்.

இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிக்குச் சில மாதங்கள்முதல் ஓராண்டுவரைகூடப் பிடிக்கும்.

இந்த ஆலை, ஆண்டுக்குச் சுமார் 700 மில்லியன் முறை போடத்தேவையான தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் என முதலில் மதிப்பிடப்பட்டது.

ஆனால் இப்போது அது ஒரு பில்லியனாக உயர்த்தப்பட்டுள்ளது.  

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *