ஜெய்சங்கர் – குரேஷி பேச்சுக்கு வாய்ப்பில்லை

Spread the love


இஸ்லாமாபாத் : ‘தஜிகிஸ்தான் மாநாட்டின் போது, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பேச்சு நடத்தும் திட்டம் இல்லை,” என, பாக்., வெளியுறவு துறை அமைச்சர் ஷா மகமூத் குரேஷி தெரிவித்துள்ளார்.

மத்திய ஆசியாவைச் சேர்ந்த, தஜிகிஸ்தான் நாட்டின் தலைநகர் துஷன்பியில், இன்று, ஆசியா – இஸ்தான்புல் செயல்திட்ட மாநாடு நடைபெற உள்ளது. அழைப்புஆப்கனில் அமைதி, ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது, பிராந்திய பாதுகாப்பை வலுப்படுத்துவது ஆகியவை தொடர்பான இந்த மாநாட்டில், ஆசிய நாடுகளின் வெளியுறவு துறை அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். ‘இம்மாநாட்டில் பங்கேற்க வரும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பேச்சு நடத்தும் திட்டம் உள்ளதா’ என, பாக்., வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மகமூத் குரேஷியிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு, ”அது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. பேச்சுக்கு அழைப்பு வரவும் இல்லை,” என, அவர் பதில் அளித்தார்.கடந்த, 2019ல் ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. அதுமுதல், இந்தியா – பாக்., இடையிலான உறவு மேலும் விரிசல் அடைந்து வருகிறது. இரு நாடுகளும், பரஸ்பரம் துாதர்கள் இன்றி செயல்பட்டு வருகின்றன.உறுதிஇந்நிலையில், ‘நடந்ததை மறந்துவிட்டு, இந்தியா – பாக்., முன்னேற்றம் குறித்து பேச வேண்டிய தருணம் இது’ என, பாக்., ராணுவ தலைமை தளபதி குமர் ஜவேத் பஜ்வா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, தஜிகிஸ்தான் மாநாட்டின் போது, ஜெய்சங்கர் – குரேஷி சந்தித்து பேச்சு நடத்த உள்ளதாக, ஊடகங்களில் செய்தி வெளியானது.இதை, ஜெய்சங்கர் ஏற்கனவே மறுத்த நிலையில், குரேஷியும் அதை உறுதி செய்துள்ளார்.

AdvertisementTHANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *