செய்தியாளர் கூட்டத்தில் கண்ணீர் சிந்திய டென்னிஸ் நட்சத்திரம் நவோமி ஒசாக்கா

Spread the love


அமெரிக்காவின் சின்சினாட்டி (Cincinnati) நகரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்திலிருந்து டென்னிஸ் நட்சத்திரம் நவோமி ஒசாக்கா (Naomi Osaka)கண்ணீருடன் வெளியேறினார்.

பிரெஞ்சு ஓப்பன் (French Open) போட்டியிலிருந்து விலகியதற்கு பின், அவர் கலந்துகொண்ட முதல் செய்தியாளர் கூட்டம் அது.

ஊடகம் மூலம் ஒசாக்கா பயனடைவதாகவும், ஆனால் செய்தியாளர்களிடம் அவர் பேச விரும்புவதில்லை என்றும் சந்திப்பின்போது செய்தியாளர் ஒருவர் கூறினார்.

அதற்குப் பதிலளிக்க முயன்ற 23 வயது ஒசாக்கா, கண்ணீர் சிந்தினார்.

சந்திப்பு நடைபெற்ற அறையைவிட்டு வெளியேறிய அவர், சிறிது நேரம் கழித்து மீண்டும் கலந்துகொண்டார்.

மனநலப் பிரச்சினைகள் காரணமாக, இந்த ஆண்டு பிரெஞ்சு ஓப்பன் போட்டியிலிருந்து ஒசாக்கா விலகினார்.

அவரை அச்சுறுத்தும் வகையில் செய்தியாளர் கேள்வி கேட்டதாக ஒசாக்காவின் நிர்வாகி குறை கூறினார்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: