சென்னை வந்தார் விராட் கோலி: ஆர்சிபி பயிற்சி முகாமில் இணைகிறார் | Kohli reaches Chennai to join RCB squad, to be in quarantine for seven days

Spread the love


ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி, ஐபிஎல் பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக இன்று சென்னை வந்து சேர்ந்தார். 7 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்குப் பின் முறையாக அணியில் கோலி இணைவார்.

ஏப்ரல் 9-ம் தேதி சென்னையில் தொடங்கும் ஐபிஎல் டி20 சீசனுக்காக கடந்த செவ்வாய்க்கிழமையிலிருந்து ஆர்சிபி அணி சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த முகாமில் சேர வரும் வீரர்கள் பிசிசிஐ விதிமுறைப்படி 7 நாட்கள் தனிமைப்படுத்துதல், 3 கட்ட கரோனா பரிசோதனைக்குப் பின் அணியில் சேர்க்கப்படுவார்கள்.

அந்த வகையில் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் ஏபி டிவில்லியர்ஸ் நேற்று இரவு சென்னை வந்து சேர்ந்தார். அவரும் இன்று முதல் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

சென்னை வந்து சேர்ந்த ஏபி டிவில்லியர்ஸ்

இந்நிலையில் ஆர்சிபி கேப்டன் கோலி, இன்று காலை முகக்கவசத்துடன் சென்னை வந்து சேர்ந்தார். ஆர்சிபி வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டலில் 7 நாட்கள் தனிமைக்குப் பின் கோலி, அணியினருடன் பயிற்சியில் ஈடுபடுவார்.

புனேவில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி முடிந்தவுடன், பயோ-பபுள் சூழலில் இருந்து வெளியேறிய கோலி, குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்றார். பயோ-பபுள் சூழலிருந்து கோலி வெளியேறியதால், ஆர்சிபி அணிக்குள் நேரடியாகச் செல்ல முடியாமல் தனிமைப்படுத்திக்கொள்ள இருக்கிறார்.

ஏப்ரல் 9-ம் தேதி சென்னையில் நடக்கும் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது ஆர்சிபி அணி. கடந்த ஒரு வாரமாகத் தனிமைப்படுத்திக் கொண்டிருந்த பயற்சியாளர் சைமன் கேடிச், வேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் ஷைனி ஆகியோர் பரிசோதனையில் கரோனா பாதிப்பு இல்லை எனத் தெரியவந்ததையடுத்து, இன்று பயிற்சியில் ஈடுபட்டனர்.

ஆர்சிபி வீரர்களுக்காக உருவாக்கப்பட்ட சொகுசுப் பேருந்து

ஆர்சிபி வீரர்கள் மட்டும் செல்வதற்காக பிரத்யேகமான சொகுசுப் பேருந்து, ஆர்சிபி அணியின் புகைப்படங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருக்கும் ஆர்சிபி வீரர்கள் ஸ்ரீ ராமச்சந்திரா ஆராய்ச்சி மையத்தின் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *