சூயெஸ் கால்வாய்- சரக்குக் கப்பலை விடுவிக்கும் முயற்சிகள் மீண்டும் தோல்வி

Spread the love


சூயெஸ் (Suez) கால்வாயில் தரைதட்டிய சரக்குக் கப்பலை விடுவிக்கும் முயற்சிகள் மீண்டும் தோல்வியடைந்துள்ளன.

நேற்று எடுக்கப்பட்ட முயற்சிகள், கப்பலின் பின்பகுதியையும், சுக்கானையும் லேசாக நகர்த்தின.

கால்வாய் எப்போது மீண்டும் போக்குவரத்துக்குத் திறக்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

கால்வாயின் இருபுறத்திலும் 320க்கும் மேற்பட்ட கப்பல்கள் காத்திருப்பதாக சூயெஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வலுவான காற்றைக் காட்டிலும் தொழில்நுட்பக் கோளாறு அல்லது மனிதப் பிழைகளே கப்பல் தரைதட்டியதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் அவர்கள் சுட்டினர்.

தரைதட்டியுள்ள மாபெரும் சரக்குக் கப்பலை விடுவிக்க முயலும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்க, அகழ்வாராய்ச்சி நிபுணர்களின் குழுவை அனுப்ப அமெரிக்கக் கடற்படை திட்டமிட்டுள்ளது.

உலகக் கப்பல் போக்குவரத்தில் கிட்டத்தட்ட 15 விழுக்காடு சூயெஸ் கால்வாய் வழியாகச் செல்கிறது.

கால்வாயில் ஏற்பட்ட தடை, உலக வர்த்தகத்திற்கு ஒரு வாரத்திற்கு 10 பில்லியன் வெள்ளிவரை கூடுதல் செலவை உண்டாக்கும் என்று ஆய்வில் தெரிவித்துள்ளது.

ஆகையால், சில கப்பல் நிறுவனங்கள் மாற்று வழிகளை முயன்று வருகின்றன.  

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *