சூயெஸ் கால்வாயில் சரக்குக் கப்பல் எப்படி தரைதட்டியது? – விசாரணை தொடங்கியது

Spread the love


Images

  • suez

    படம்: REUTERS 

சூயெஸ் கால்வாயில் Ever Given சரக்குக் கப்பல் எப்படி தரைதட்டியது என்பது தொடர்பாக அதிகாரபூர்வ விசாரணை இன்று தொடங்கியது.

மார்ச் 23ஆம் தேதி தரைதட்டிய சரக்குக் கப்பலால் சூயெஸ் கால்வாயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கால்வாய் வழி செல்ல வேண்டிய நூற்றுக்கும் மேற்பட்ட கப்பல்கள் சுமார் ஒரு வாரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

பலத்த காற்று உள்ளிட்ட மோசமான வானிலை, மனிதத் தவறுகள் ஆகியவை சரக்குக் கப்பல் தரைதட்டக் காரணங்களாக இருக்கக்கூடும் என்று சூயெஸ் கால்வாய் அதிகாரிகள் கூறினர்.

விசாரணையில் சரக்குக் கப்பல் கடல் போக்குவரத்திற்கு உகந்ததாக, சம்பவத்தின் போது கப்பலின் மாலுமி என்ன முடிவுகளை எடுத்தார் போன்ற அம்சங்கள் முக்கிய அங்கம் வகிக்கும்.

போக்குவரத்து பாதிப்பால் 100 மில்லியன் டாலருக்கும் அதிகமான நட்டத்தைக் கப்பல் நிறுவனங்கள் சந்திக்கக்கூடும்.

சூயெஸ் கால்வாயில் கப்பல் போக்குவரத்து இரண்டு நாள்களுக்கு முன்னர் வழக்கநிலைக்குத் திரும்பியது.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: