சூயஸ் கால்வாய் சம்பவம்: கப்பல் போக்குவரத்துக்கான கட்டணங்கள் வெகுவாக அதிகரிப்பு

Spread the love


Images

  • container

    படம்: AFP

சூயஸ் (Suez) கால்வாயில் பெரிய கொள்கலன் கப்பல் தரைதட்டிய சம்பவத்தைத் தொடர்ந்து கப்பல் போக்குவரத்துக்கான கட்டணங்கள் வெகுவாக அதிகரிக்கின்றன.

உலகளவில் கப்பல் வர்த்தகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

எகிப்து கப்பல்கள் அனைத்தையும் அந்தப் பகுதிக்குள் நுழையவிடாமல் தடுத்துள்ளது.

கால்வாயை அடைத்துக்கொண்டு நிற்கும் கப்பலை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு வாரங்கள் பிடிக்கலாம் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

அதிக சிரமங்களுக்கு இடையே அதற்கான பணிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன.

குறுகிய காலத்துக்கு நிறுவனங்கள் அவற்றின் கப்பல்களை மாற்றுப் பாதைகளில் திருப்பிவிடுவதைத் தவிர வேறுவழி இல்லை.

கப்பல் அங்கு சிக்கியிருப்பதால் பொருள்களின் ஏற்றுமதி இறக்குமதியும் பாதிக்கப்பட்டுள்ளது.

உலக வர்த்தகத்தில் சுமார் 12 விழுக்காட்டுப் பொருள்கள் சூயஸ் கால்வாயின் வழியாகச் செல்கின்றன. 

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *