சூயஸ் கால்வாயில் அடைப்பு – வட்டாரத்திற்கான பொருள் விநியோகம் தடைபடக்கூடும்: ஓங் யீ காங்

Spread the love


Images

  • suez canal

    (படம்: AP)

சூயஸ் கால்வாயில் சரக்குக் கப்பலால் ஏற்பட்டுள்ள அடைப்பு நீடித்தால் துறைமுக நிறுவனமான PSA சில இடையூறுகளை எதிர்நோக்கக்கூடும் என்று போக்குவரத்து அமைச்சர் ஓங் யீ காங் (Ong Ye Kung) தெரிவித்துள்ளார்.

அந்தச் சம்பவத்தை மத்திய விரைவுச்சாலையில் ஒரு பெரிய மரம் விழுவதற்கு ஒப்பிட்டுத் தம் Facebook பக்கத்தில் எழுதியிருந்தார் திரு. ஓங்.

எப்படி அதனுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து விரைவுச்சாலைகளும் பாதிக்கப்படுமோ, அதே போல் வட்டாரத்திற்கான பொருள் விநியோகம் தற்காலிகமாகத் தடைபடக்கூடும் என்று அவர் கூறினார்.

அவ்வாறு நடந்தால், இருப்பிலுள்ள பொருள்களைப் பயன்படுத்தவேண்டிய அவசியம் ஏற்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சூயஸ் கால்வாய், ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் குறுக்குவழி.

கப்பல்கள் ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றிவர வேண்டியிருந்தால் பயண நேரம் கூடுதலாக 1 வாரமோ 2 வாரமோ எடுக்கலாம் என்று அமைச்சர் ஓங் சுட்டினார்.

பணிகள் சுமுகமாகத் தொடர்வதை உறுதிசெய்ய, PSA முன்கூட்டியே திட்டமிடவேண்டும் என்று அவர் சொன்னார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *