சுவிட்சர்லந்து பெண்கள் காற்பந்து விளையாட்டாளர் நீச்சல் விபத்தில் மரணம்

Spread the love


Images

  • Florijana Ismaili

    (படம்: AFP)

சுவிட்சர்லந்து பெண்கள் காற்பந்துக் குழுவைச் சேர்ந்த ஃப்ளோரியானா இஸ்மாயிலி, நீச்சலின் போது ஏற்பட்ட விபத்தில் மாண்டார்.

இத்தாலியின் கோமோ (Como) ஏரியில் நடந்த விபத்தில் அவர் மாண்டதை சுவிட்சர்லந்து காற்பந்துச் சம்மேளனம் உறுதிப்படுத்தியது.

24 வயது ஃப்ளோரியான இஸ்மாயிலி, சுவிட்சர்லந்து பெண்கள் காற்பந்துக் குழுவுக்காக 33 முறை விளையாடி இருக்கிறார்.

சனிக்கிழமை அவர் காணாமல் போனார்.

வாடகைப் படகிலிருந்து ஏரியில் குதித்த ஃப்ளோரியானா இஸ்மாயிலி மீண்டும் மேலே வரவில்லை.

இத்தாலிய அதிகாரிகள் அவருடைய உடலை நேற்று மீட்டனர். 

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *