‘சுயெஸ் கால்வாயில் தரைதட்டிய சரக்குக் கப்பல் சரியான திசையில் திருப்பிவிடப்பட்டுள்ளது’

Spread the love


Images

  • suez canal (2)

    Reuters

சுயெஸ் (Suez) கால்வாயில் தரைதட்டிய சரக்குக் கப்பல் சரியான திசையில் திருப்பிவிடப்பட்டுள்ளதாக எகிப்திய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் அது போக்குவரத்து மீண்டும் தொடர்வதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

கடந்த ஒரு வாரமாய் சுயெஸ் கால்வாயின் போக்குவரத்தை அது முடக்கிவைத்துள்ளது.

சுமார் 80 விழுக்காடு, கப்பல் சரியான திசைக்குத் திருப்பிவிடப்பட்டுள்ளதாக சுயெஸ் கால்வாய் ஆணையத்தின் தலைவர்
ஒசாமா ராபி (Osama Rabie) தெரிவித்தார்.

கப்பலின் பின்புறம் கரையில் இருந்து 102 மீட்டர் சரியான திசையில் திருப்பிவிடப்பட்டுள்ளது.

முன்னர், அது கரையில் இருந்து
4 மீட்டராக இருந்தது.

சுயெஸ் கால்வாயில் தரைதட்டிய கப்பலை இன்று காலை முதல் 11 இழுவைப் படகுகள் இழுத்து வருகின்றன.

கப்பல் தரைதட்டியபோது அதன் முன் பகுதி சேதமடைந்ததாகப் பேச்சாளர் ஒருவர் AFP செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

ஆனால் புதிய சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.

அநேகமாய் வரும் திங்கட்கிழமை கடல் மட்டம் உயரும் போது தூர்வாரும் பணி மீண்டும் தொடங்கும் என்று சுயெஸ் கால்வாய் ஆணையம் தெரிவித்தது.

இந்நிலையில் வர்த்தகம் தடைபட்டிருப்பதால் ஒவ்வொரு நாளும் எகிப்துக்கு 12 முதல் 14 மில்லியன் டாலர் நட்டம் ஏற்படுவதாக ஆணையம் தெரிவித்தது.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *