சீனா செல்லவிருக்கும் பிரபலக் காற்பந்து வீரர் – வாரம் 1.2 மில்லியன் டாலர் சம்பளம்

Spread the love


Images

  • bale

    படம்:  AFP

ரியால் மாட்ரிட் காற்பந்து அணியின் முன்னிலை ஆட்டக்காரான கேரத் பேல் (Gareth Bale) சீனாவில் உள்ள ஜியாங்சு சுனிங் (Jiangsu Suning) அணிக்கு விளையாடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேல், ஜியாங்சு அணிக்காக 3 ஆண்டுகள் விளையாட ஒப்பந்தம் செய்யப்படும் என்றும் அதன்மூலம் அவருக்கு வாரம் 1.2 மில்லியன் டாலர் சம்பளம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

ரியால் மாட்ரிட் அணியை விட்டு பேல் விரைவில் வெளியேறப்போவதாகவும் அதன் பயிற்றுவிப்பாளர் ஸிடேன் தெரிவித்திருந்தார்.

சீனாவில் தற்போது காற்பந்து மோகம் அதிகரித்து வருவதால், பல பிரபலமான வீரர்கள் சீனக் காற்பந்து அணிகளுடன் பெரும் தொகைக்கு ஒப்பந்தம் செய்துவருகின்றனர்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *