‘சிறையில் இசை வேண்டும்’ – வாதாடி வென்ற இத்தாலியின் குண்டர் கும்பல் தலைவர்

Spread the love


இத்தாலியின் சிறையில் தனிமையில் அடைக்கப்பட்டுள்ள குண்டர் கும்பல் தலைவர் ஒருவர், சிறையில் இசை கேட்பதற்காகத் தொடுத்த வழக்கை வென்றுள்ளார்.

கொலை, குண்டர் கும்பல் தொடர்பிலான குற்றங்களுக்காக 48 வயது Domenico Strisciuglioவுக்குச் சுமார் 20 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

Strisciuglioவின் இசைவட்டுக் கருவிக்கான வேண்டுகோளைச் சிறை அதிகாரிகள் மறுக்க, அவருடைய வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததாக The Guardian செய்தி நிறுவனம் கூறியது.

நேற்று (பிப்ரவரி 18), சஸ்ஸாரி நகர நீதிபதிகள், இசை கேட்பது 1999ஆம் ஆண்டிலிருந்து சிறையில் இருக்கும் Strisciuglioவின் அடிப்படை உரிமை எனத் தீர்ப்பளித்துள்ளனர்.

அவர் அறையில் தொலைக்காட்சி இருந்தாலும், இசை கேட்பதில் ஆர்வமுடைய ஒருவருக்குத் தேவையான அலைவரிசைகள் அதில் இல்லை என நீதிபதிகள் தெரிவித்ததாக The Guardian குறிப்பிட்டது.

2019ஆம் ஆண்டில் Strisciuglio நள்ளிரவுக்குப் பின்னரும் தொலைக்காட்சி பார்க்க தமக்கு அனுமதி வழங்கப்படவேண்டும் என்று தொடுத்த வழக்கை வென்றார்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *