சிறு வயதில் பெறும் நல்ல அனுவபங்கள் பெரியவர்களின் மன ஆரோக்கியதற்கு வழிவகுக்கின்றன

Spread the love


பிள்ளைப் பருவத்தின் ஆக்ககரமான அனுபவங்களுக்கும்,
வளர்ச்சியடைந்தோரின் மேம்பட்ட மனநலத்துக்கும் தொடர்பிருப்பதாக அண்மை ஆய்வு கூறுகிறது.

6,000க்கும் அதிகமானோரிடம் அந்த ஆய்வு நடத்தப்பட்டது.

பிள்ளைப் பருவத்தில் எந்த அளவு ஆதரவு கிட்டியதாய் நினைத்தனர், குடும்பம் அல்லது நண்பர்களுடன் பிணைக்கப்பட்டிருந்தனர், வளரும்போது அவர்களது உணர்வுகளைப் பற்றிப் பேச முடிந்ததா என்று அவர்களிடம் கேட்கப்பட்டது.

குடும்பத்தினர், நண்பர்கள், பள்ளியிலும் சமூகத்திலும் பழக்கப்பட்டவர்கள் ஆகியோரிடம் ஆதரவான அனுபவங்களைப் பெற்றவர்கள் வளர்ந்தபிறகு மனநலம் தொடர்பான பிரச்சினைகளையோ, உறவுச் சிக்கல்களையோ எதிர்நோக்கவில்லை.

அதேநேரத்தில் துன்புறுத்தல், நிராகரிப்பு, வன்முறை, பெற்றோரின் மறைவு போன்றவற்றை எதிர்கொண்டோருக்குத் தொடர்ந்து உடல், மன ரீதியான பிரச்சினைகள் இருந்ததை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

6 அல்லது 7 நல்ல அனுபவங்களைக் கொண்டிருந்தோர் மன அழுத்தத்துக்கு ஆளாகும் விகிதம் 72 விழுக்காடு குறைவு என்று ஆய்வில் தெரியவந்தது.

பெற்றோர் பிள்ளைகளுக்கு நேரும் மோசமான அனுபவங்களைத் தடுக்க முடியாவிட்டாலும், அவர்களுக்கு மீள்திறனைக் கற்றுத்தரவேண்டும் என்று ஆய்வு பரிந்துரைக்கிறது.

சிக்கலான நேரத்தில் குடும்பத்தின் ஆதரவு பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு உணர்வையும், வாழ்க்கை மீதான நல்ல எண்ணத்தையும் கற்றுக்கொடுக்கும் என்று அது கூறுகிறது. 

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *