சிறந்த வீரர் ஜோ ரூட்

Spread the love

துபாய்: ஐ.சி.சி.,யின் ஆகஸ்ட் மாத சிறந்த வீரராக இங்கிலாந்தின் ஜோ ரூட் தேர்வு செய்யப்பட்டார். 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைக்கு விருது வழங்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் சிறப்பாக செயல்பட்ட ‘டாப்–3’ வீரர்கள் பட்டியலில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட், பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷஹீன் அப்ரிதி பரிந்துரை செய்யப்பட்டு இருந்தனர். 

தற்போது  இதில் சிறந்த வீரராக ஜோ ரூட் தேர்வு செய்யப்பட்டார். கடந்த மாதம் நடந்த இந்தியாவுக்கு எதிரான மூன்று டெஸ்டில் மூன்று சதம் உட்பட 507 ரன் குவித்து, ‘ரேங்க்’ பட்டியலில் ‘நம்பர்–1’ இடத்துக்கு உயர்ந்ததை அடுத்து விருது கிடைத்துள்ளது. 

 சிறந்த வீராங்கனை விருதுக்கு தாய்லாந்தின் நாட்டயா பூச்சதம், அயர்லாந்தின் கேபி லீவிஸ், ஈமியர் ரிச்சர்ட்சன் பரிந்துரை செய்யப்பட்டனர். இதில் ஈமியருக்கு சிறந்த வீராங்கனை விருது கிடைத்தது. 

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: