சிறந்த வீரர் சாகிப்: ஐ.சி.சி., அறிவிப்பு

Spread the love


துபாய்: ஐ.சி.சி., சார்பில் ஜூலை மாதத்தின் சிறந்த வீரராக வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன் தேர்வானார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

இதன்படி, கடந்த ஜூலை மாதம் சிறப்பாக செயல்பட்ட ‘டாப்–3’ வீரருக்கான பரிந்துரை பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மிட்சல் மார்ஷ், வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன், விண்டீசின் ஹைடன் வால்ஷ் ஜூனியர் இடம் பிடித்திருந்தனர். இதில் சாகிப், சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். 

ஜிம்பாப்வே தொடரில் சிறப்பாக செயல்பட்ட இவர், ஐ.சி.சி., ‘டுவென்டி–20’ போட்டிக்கான ‘ஆல்–ரவுண்டர்’ தரவரிசையில் ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறினார்.

சிறந்த வீராங்கனைக்கான பரிந்துரை பட்டியலில் விண்டீசின் ஸ்டெபானி டெய்லர், ஹேலி மாத்யூஸ், பாகிஸ்தானின் பாத்திமா சானா பரிந்துரைக்கப்பட்டனர். இதில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள், ‘டுவென்டி–20’ தொடரில் ‘ஆல்–ரவுண்டராக’ அசத்திய ஸ்டெபானி டெய்லர், சிறந்த வீராங்கனையாக தேர்வானார்.

Advertisement





THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: