சிங்கப்பூரில் 10இல் 4 பெண்கள் வேலையிடங்களில் பாலின பேதத்தை எதிர்கொண்டுள்ளனர்

Spread the love


சிங்கப்பூரில் உள்ள வேலையிடங்களில் பாலின பேதம் நீடிப்பதாக நிறுவனங்களிடையே நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

சென்ற ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் 384 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

அவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் பெண்கள்.

ஆய்வில் பங்குபெற்ற பெண்களில் 10இல் நால்வர், வேலையிடங்களில் பாலின பேதத்தை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

பத்தில் ஓர் ஆண் மட்டுமே அவ்வாறு உணர்ந்ததாக ஆய்வில் குறிப்பிடப்பட்டது.

ஒரே பதவியில் உள்ள ஆணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறு சம்பளங்கள் வழங்கப்படுவது, பதவி உயர்வுக்குப் பாலினம் ஒரு காரணமாகக் கருதப்படுவது ஆகிய உதாரணங்கள் ஆய்வில் முன்வைக்கப்பட்டன.

கிட்டத்தட்ட 12 விழுக்காட்டினர் பாலின பேதம் தொடர்பான சம்பவங்களைக் குறிப்பிட்டனர்.

பெரும்பாலான சமயங்களில் அதுகுறித்த புகார்கள் எழுப்பப்பட்டபோதும் திருப்திகரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டது.

அதை அடுத்து, சிங்கப்பூர் சீன வர்த்தக, தொழிற்சபை பாலின பேதம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும்படி நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன், பாலின பேதம் குறித்த புகார்களுக்கான நடைமுறைகளை மேம்படுத்தும்படியும் அது வலியுறுத்தியது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *