சிங்கப்பூரின் உணவு உற்பத்தி – நீடித்த நிலைத்தன்மையை எட்டுவதில் முன்னேற்றம்

Spread the love


சிங்கப்பூரில் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்த 2030க்குள் 30 விழுக்காட்டு உணவை இங்கேயே உற்பத்தி செய்யத் திட்டமுள்ளது.

உள்ளூர் உணவு உற்பத்தியில் நீடித்த நிலைத்தன்மையை எட்டவேண்டும் என்ற நோக்கத்தில் அரசாங்கத்தின் மானியத்தைப் பயன்படுத்திப் பலனடைகின்றனர் உணவு உற்பத்தித் துறையினர்.

சிங்கப்பூரில் தற்போது பத்து விழுக்காடு என்ற அளவிலேயே உணவு உற்பத்தி செய்யப்படுகிறது.
̀
வெளிப்புறச் சூழல் எந்த நேரத்திலும் மாறலாம்.

அதனால் வெளிநாட்டு இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைத்துக்கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்துகிறார் விரிவுரைநாளர் விசாலினி முத்துசாமி.

வெளிநாட்டில் ஏதாவது இயற்கைப் பேரழிவுகள் அல்லது நோய்ப்பரவல் ஏற்பட்டால் சிங்கப்பூருக்கு வரக்கூடியஉணவுப்பொருள்களின் அளவு குறையலாம் அல்லது அந்த நாட்டில் ஏற்றுமதி ரத்து செய்யப்படலாம்.

கிருமிப்பரவல் சூழலிலும் நமக்கு உணவு தடையின்றிக் கிடைத்தது.

அதற்காக மொத்த விற்பனையாளர்கள் பட்ட சிரமங்கள் மிக அதிகம்.

சிங்கப்பூருக்கு உணவைத் தருவிப்பதில் அவர்கள் சந்தித்த சவால்கள் பற்றி இன்றிரவு 9:30 மணிக்கு வசந்தத்தில்ஒளியேறும் ‘எதிரொலி’ நிகழ்ச்சியில் விரிவாகப் பார்க்கலாம். 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *