சாலியை உடனே விடுவியுங்கள் – ரிஷாட் எம்பி

Spread the love


குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பு – மட்டக்குளியில் நேற்று (28) இடம்பெற்ற நிகழ்வில் பகிரங்க வேண்டுகோளை விடுத்தார்.

அசாத் சாலியை விசாரணை செய்து, அவர் தவறிழைக்காவிட்டால் உடனடியாக விடுதலை செய்யுங்கள். சமூகத்துக்காக கருத்து தெரிவித்தார் என்பதற்காக, அவரின் குரல்வளையை நசுக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம்.

அவரை தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைத்திருப்பது தருமமும் நீதியும் அல்ல. சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகளுக்காக ஓயாது குரல் கொடுத்தவர். குறிப்பாக, ஜனாஸா அடக்கும் முயற்சிகளுக்கும் அவர் எங்களுடன் இணைந்து போராடினார் என்றும் குறிப்பிட்டார்.



THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *