சாம்பியன்ஸ் லீக் கால்பந்து அரங்கில் விருது வென்ற மருத்துவர்கள்… நெகிழவைத்த சம்பவம்! | UEFA honoured medical staff who treated Christian Eriksen

Spread the love

களத்தில் இருந்த மருத்துவர்கள் நால்வர், UEFA வென்யூவில் இருந்த மருத்துவ அலுவலர்கள் இருவர்கள், டென்மார்க் அணியின் டீம் டாக்டர், பிசியோ உள்ளிட்டோர் இந்த விருதுகளைப் பெற்றுள்ளனர். அதோடு, டென்மார்க் கேப்டன் சிமோன் கியாரும் இந்த விருது பெற்றார். அந்தத் தருணத்தில் இவரது செயல்பாடுகளும் பெருமளவில் பாராட்டப்பட்டது.

ஃபின்லாந்து பாக்ஸுக்கு அருகே எரிக்சன் விழ, டென்மார்க் பாக்சிலிருந்து ஓடோடி வந்தார் கியார். அப்படியே குப்புற விழுந்தவரை, சரியான முறையில் படுக்கவைத்து, அவரது சுவாசக்குழாயை நா தடுக்காமல் இருக்கிறதா என்பதை உறுதி செய்தார். உடனடியாக மருத்துவர்களை உள்ளே வரச் சொல்லி சைகை செய்தார். அதுமட்டுமல்லாமல், களத்துக்குள் வந்து கண்ணீர் சிந்திக்கொண்டிருந்த எரிக்சனின் மனைவி சப்ரினாவுக்கு ஆறுதல் சொல்லித் தேற்றினார். மருத்துவர்கள் சிகிச்சை ஆரம்பித்தபோது, தன் அணி வீரர்களை ஒன்றிணைத்து எரிக்சனைப் பாதுகாத்து வட்டம் அமைத்தார். ஒரு கேப்டனாக, ஒரு தலைவனாக, என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்தார் கியார். அவரோடு சேர்த்து மொத்தம் 9 பேர் இந்த விருதைப் பெற்றிருக்கிறார்கள்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: