சாம்பியன்ஸ் லீக் இறுதியாட்ட நுழைவுச்சீட்டுகள் தொடர்பாக ரசிகர்கள் அதிருப்தி

Spread the love


Images

  • Salah

    படம்: REUTERS

சாம்பியன்ஸ் லீக் இறுதியாட்டத்தில் டாட்டன்ஹாம் குழுவும் லிவர்ப்பூல் குழுவும் மோதுவதற்கு முன்பாகவே சர்ச்சைகள் தொடங்கிவிட்டன.

மாட்ரிட்டில் உள்ள வாண்டா மெட்ரோபோலிட்டானோ அரங்கில், அடுத்த மாதம் முதல் தேதி ஆட்டம் நடைபெறவிருக்கிறது.

68,000 இருக்கைகள் கொண்டுள்ள அரங்கில், அவ்விரு குழுக்களுக்கும் தரப்புக்கு 16,000 நுழைவுச்சீட்டுகளே ஒதுக்கப்பட்டுள்ளன.

இது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டம் நடைபெறும் வாரயிறுதியின்போது பிரிட்டனிலிருந்து ஸ்பெயினுக்குச் செல்வதற்கான விமானச்சீட்டுகளின் விலையும் அதிகரித்துள்ளது.

வழக்கமாக 130 டாலருக்கு விற்கப்படும் விமானச்சீட்டுகளின் விலை 2,000 டாலருக்கு உயர்ந்துள்ளது.

மாட்ரிட்டில் உள்ள ஹோட்டல்களில் அறை வாடகை பத்து மடங்கு உயர்ந்துள்ளது.

இதே போன்ற நிலையை ஆர்சனல், செல்சி ரசிகர்களும் சந்திக்க வேண்டியுள்ளது.

இம்மாதப் பிற்பகுதியில் அஸர்பைஜானில் நடைபெறவுள்ள யூரோப்பா லீக் இறுதியாட்டத்தில் அவ்விரு குழுக்களும் மோதுகின்றன.

அங்கு பயணம் செய்வதற்கான செலவுகளும் அதிகரித்துள்ளன. 

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *