சானியா ஜோடி 2வது இடம்

Spread the love


கிளீவ்லாந்து: கிளீவ்லாந்து ஓபன் டென்னிஸ் இரட்டையர் பைனலில் இந்தியாவின் சானியா, அமெரிக்காவின் கிறிஸ்டினா ஜோடி தோல்வியடைந்தது.

அமெரிக்காவில், டபிள்யு.டி.ஏ., கிளீவ்லாந்து ஓபன் டென்னிஸ் நடந்தது. இதன் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சானியா மிர்சா, அமெரிக்காவின் கிறிஸ்டினா மெக்ஹேல் ஜோடி, ஜப்பானின் ஷுகோ அயோமா, இனா ஷிபஹாரா ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 5–7 என போராடி இழந்த சானியா ஜோடி, 2வது செட்டை 3–6 எனக் கோட்டைவிட்டது.

ஒரு மணி நேரம், 24 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய சானியா, கிறிஸ்டினா ஜோடி 5–7, 3–6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தது.

Advertisement





THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: