சாக்ஸ் ஈரமாகிவிட்டதால் டேக் ஆஃபில் சிரமப்பட்டேன்: கள அனுபவத்தைப் பகிர்ந்த மாரியப்பன் தங்கவேலு | Tokyo Paralympics: Would have cleared 1.90m mark if conditions were better, says Mariyappan Thangavelu

Spread the love

மழையில் சாக்ஸ் நனைந்து ஈரமாகிவிட்டதால் டேக் ஆஃபில் சிரமப்பட்டேன். இல்லாவிட்டால் 1.90 மீட்டர் இல்லக்கை எட்டியிருப்பேன் என்று தனது கள அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார் மாரியப்பன் தங்கவேலு.

டோக்கியோவில் நடந்துவரும் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான உயரம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்றார்.

2015-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் (டி 63) பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்று தேசத்துக்குப் பெருமை சேர்த்த தமிழகத்தின் தங்கவேலு இந்த முறை வெள்ளி வென்றுள்ளார். பாராலிம்பிக்கில் தங்கவேலு வெல்லும் 2-வது பதக்கம் இதுவாகும்.

ஈர சாக்ஸால் சிரமம்..

யூரோ ஸ்போர்ட் நிறுவனத்துக்கு மாரியப்பன் அளித்த பேட்டியில், “இன்று விளையாட்டை ஆரம்பித்தபோதே லேசாக மழை தூரல் இருந்தது. ஆரம்பத்தில் சிரமம் தெரியவில்லை. ஆனால், 1.80 மீட்டர் உயரத்தைக் கடந்து தாண்டும் போது மழை அதிகமானது. மழைநீரில் நனைந்து எனது சாக்ஸ் ஈரமானது. அப்போது நான் உண்மையான சவாலை சந்தித்தேன். எனக்கு டேக் ஆஃபில் பிரச்சினை தென்பட்டது. இல்லாவிட்டால் நிச்சயமாக 1.90 மீட்டரைக் கடந்திருப்பேன்” என்று கூறியுள்ளார்.

3 வாய்ப்புகளும் மாரியப்பன் பெற்ற புள்ளிகளும்..

ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் 3 வாய்ப்புகள் வழங்கப்படும். இதில் 1.70 மீ உயரத்துக்கான மார்க்கில் தங்கவேலு 1.73 மீட்டர் உயரம் தாண்டினார். அடுத்த சுற்றில் 1.77 மீட்டராக உயரம் அதிகரிக்கப்பட்டது. 1.77 மீட்டர், 1.80 மீட்டர் எனத் தொடர்ந்து மாரியப்பன் உயரத்தைக் கடந்து சென்றார். 1.83 மீட்டர் உயரத்தை முதல் முயற்சியிலேயே தங்கவேலு கடந்தார். 1.86 மீட்டர் உயரத்தை மூன்றாவது முயற்சியில் கடந்தார். 1.88 மீட்டர் உயரத்தைத் தாண்டுவதில் முதல் இரு முயற்சிகளிலும் இந்தியாவின் தங்கவேலுவும், அமெரிக்காவின் சாம் கிரீவும் தோல்வி அடைந்தனர். 3-வதுமுயற்சியில் இருவரும் தோல்வி அடைந்தால், தங்கப்பதக்கம் பிரித்து வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமெரிக்க வீரர் சாம் 1.88 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றதால், தங்கவேலு தாண்ட முடியாததால் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: