சர்ச் அருகே தாக்குதல் இந்தோனேஷியாவில் பயங்கரம்| Dinamalar

Spread the love


ஜகார்த்தா : இந்தோனேசியாவில் சர்ச் அருகே நேற்று நடந்த தற்கொலைப்படைதாக்குதலில் 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவின் முக்கிய நகரங்களில் ஒன்று மக்காசர். இங்குள்ள சர்ச்சில் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நேற்று காலை நடந்த சிறப்பு பிரார்த்தனையில் பலர் பங்கேற்றிஇருந்தனர்.அப்போது பயங்கர வெடிகுண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. தேவாலயத்திலிருந்து மக்கள் அலறியடித்து வெளியில் ஓடிவந்தனர். சர்ச் வாயில் முன் ரத்த வெள்ளத்தில் மனித உடல் பகுதிகள் கிடந்தன. அப்பகுதியே புகைமூட்டமாக காணப்பட்டது. விசாரணையில் தற்காலை படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது தெரிந்தது.

இது பற்றி போலீசார் கூறியதாவது:
பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சர்ச்க்குள் நுழைய முயற்சித்துள்ளனர்.அவர்களை காவலர்கள் தடுத்துள்ளனர். அடுத்த நிமிடம் அவர்கள் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர். இதில் அவர்கள் இறந்துவிட்டனர். மேலும் இந்த குண்டுவெடிப்பில் 14க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். சர்ச் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்துவோம்.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

AdvertisementTHANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *