சருமத்திற்கு இதமான பொருட்கள் உங்கள் சமையலறையில்

Spread the loveImages

  • milk

நமது உடலில் இருக்கும் ஆகப் பெரிய உறுப்பு தோல். அதை நன்கு பராமரிப்பதற்கு சிலர் விலையுயர்ந்த களிம்புகளைப் பூசுவதுண்டு. இன்னும் சிலர் முகப் பராமரிப்பு நிலையங்களுக்குச் சென்று நிறையச் செலவு செய்வதுண்டு. ஆனால் நம் சமையலைறையிலேயே சருமத்தைப் பாதுகாக்கும் சில பொருட்கள் உள்ளன…

காலையில் சிற்றுண்டிக்கு மட்டும் உகந்தது அல்ல ஓட்ஸ். அரிப்பு, அல்லது தோல் எளிதாகச் சிவந்து போகும் போது, ஓட்ஸை கொஞ்சம் தண்ணீரில் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால் சற்று நேரத்தில் பிரச்சினை தீர்ந்து விடும்.

2. கேமோமைல் வகை தேநீர்

தோலில் அரிப்பு ஏற்பட்டு, சிவந்தால், கேமோமைல் வகை தேயிலையைப் பயன்படுத்தலாம். அதில் உள்ள கிருமி எதிர்ப்புச் சக்தி சருமத்தை மீண்டும் சீரான நிலைக்குக் கொண்டு வர உதவும்.

பால் அருந்துவது எலும்புகளுக்குப் பலம் தரும். அது சருமத்திற்கும் நல்லது. காய்ச்சப்படாத பாலில் AHA எனும் அமிலமும், விட்டமின் Dயும் உள்ளன. இது சருமத்தின் ஈரத் தன்மையைப் பாதுகாக்கிறது, இதனால் தோல் பொலிவாகத் தோன்றும். பாலில் உள்ள கொழுப்புக்குத் தீப் புண்களைக் காய வைக்கும் தன்மையையும் உண்டு. 

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *