சபாஷ் ரிஷாப் பன்ட் * இயான் பெல் பாராட்டு

Spread the love


லண்டன்: ‘‘ரிஷாப் பன்ட் இல்லாத இந்திய அணியை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை,’’ என இயான் பெல் தெரிவித்தார்.

இந்திய அணி இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் 23. சமீபத்திய போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிட்னியில் 97 ரன் எடுத்து ‘டிரா’ செய்ய கைகொடுத்த இவர், பிரிஸ்பேனில் 89 ரன்கள் எடுத்து அணியை வெற்றிபெறச் செய்து, கோப்பை வெல்ல உதவினார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தால் விலக, வாய்ப்பு ரிஷாப்புக்கு சென்றது. பேட்டிங் ஆர்டரில் 4வது இடத்தில் களமிறங்கிய இவர், இரு போட்டியில் 77, 78 ரன்கள் எடுத்து வெற்றிக்கு கைகொடுத்தார். இதுகுறித்து இங்கிலாந்து அணி முன்னாள் வீரர் இயான் பெல் கூறியது:

ரிஷாப் பன்ட் இல்லாத இந்திய அணியை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. எதிர்காலத்தில், உலகத் தரம் வாய்ந்த வீரர்களில் ஒருவராக இவர் வருவார் என நினைக்கிறேன். இந்த இளம் வயதில் அனுபவ வீரர்களைப்போல விளையாடியதை பார்த்தோம். இது மிக அபூர்வமானது. 

என்னைப் பொறுத்தவரையில் தனது வெற்றிகரமாக கிரிக்கெட் வாழ்க்கையை இப்போது தான் துவக்கியுள்ளார் என நினைக்கிறேன். ஒரு உண்மையான ‘மேட்ச் வின்னரை’ பார்ப்பது வியக்கத்தக்கதாக உள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று வித தொடரும் ரிஷாப்பிற்கு சிறப்பானதாக அமைந்தது. டெஸ்ட் தொடரில் இவர் சதம் அடித்தது, அதிக தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது. கடைசி ஒருநாள் போட்டியில் மிக அமைதியாக விளையாடினார். 

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement





THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *