சத்தீஸ்கர் மாவோயிஸ்ட் தாக்குதல்: அவர்கள் தப்பிப் பிழைப்பார்களா? அரசு அழித்தொழிக்குமா?

Spread the love


  • பிபிசி தெலுங்கு சேவை
  • .

மாவோயிஸ்ட் கொரில்லாஸ்

பட மூலாதாரம், Getty Images

சத்தீஸ்கரில் சமீபத்தில் நடந்த மாவோயிஸ்ட் தாக்குதல் எதைக் குறிக்கிறது? இந்த தாக்குதல்களை மாவோயிஸ்டுகள் மீண்டும் பலம் பெறுவதற்கான அறிகுறியாக எடுத்துக் கொள்ள முடியுமா? மாவோயிஸ்டுகள் தங்கள் ஆதிக்கப் பகுதிகளைப் பாதுகாப்பதற்காக நடத்திய கடைசிகட்ட முயற்சியாக இந்தத்தாக்குதலைப் பார்க்க முடியுமா? உண்மை என்ன?

இந்த பிரச்சனையை ஆழமாகப் புரிந்து கொள்ள பிபிசி, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர் காவல்துறை அதிகாரிகள், மாவோயிச இயக்கத்தின் நீண்டகால பார்வையாளர்கள், முன்னாள் மாவோயிஸ்டுகள், மாவோயிஸ்ட் பகுதிகளில் நீண்ட காலமாக பணியாற்றி வரும் ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுடன் பேசியது. தங்கள் அடையாளம் வெளிடப்படக்கூடாது என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

‘ஆபரேஷன் ஹிட்மா’ உண்மையில் நடந்தது என்ன?

தாக்குதலுக்கு வழிவகுத்த சூழ்நிலையை அறிந்த பல்வேறு அதிகாரிகளின் கூற்றுப்படி, மாவோயிஸ்ட் தலைவர்களில் ஒருவரான ஹிட்மா மாட்வி, ஜொனகுடா கிராமத்திற்கு அருகிலுள்ள காட்டில் தனது ஆதரவாளர்களுடன் முகாமிட்டுக் கொண்டிருப்பதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது. ஏப்ரல் 2 ஆம் தேதி இரவு, சுக்மா மற்றும் பிஜாப்பூர் மாவட்டங்களில் இருந்து எட்டு போலீஸ் குழுக்கள், இந்தப்பகுதியை நோக்கி கால்நடையாக புறப்பட்டுச்சென்றன. 8 அணிகளிலும் மொத்தமாக 2000 போலீஸார் இருந்தனர். இருப்பினும், குறிப்பிட்ட இடத்தை அவர்கள் அடைந்தபோது, அங்கு மாவோயிஸ்டுகள் இல்லை. எனவே அனைத்து அணிகளும் தங்கள் முகாம்களுக்கு திரும்பிச் சென்றன.

திரும்பிச்சென்றுகொண்டிருந்தபோது வெவ்வேறு அணிகளைச் சேர்ந்த 400 பேர் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் தொடுத்தனர். அருகிலுள்ள குன்றின் உச்சியிலிருந்து இருந்து அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர்.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *