சதர்ன் பிரேவ் அணி சாம்பியன்

Spread the love


லண்டன்: இங்கிலாந்தில் நடந்த ‘தி ஹன்டிரடு’ தொடரில் சதர்ன் பிரேவ், ஓவல் இன்விசிபில்ஸ் அணிகள் கோப்பை வென்றன.

இங்கிலாந்தில், முதன்முறையாக ‘தி ஹன்டிரடு’ (100 பந்து) கிரிக்கெட் தொடர் நடந்தது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த ஆண்களுக்கான பைனலில் சதர்ன் பிரேவ், பர்மிங்காம் பீனிக்ஸ் அணிகள் மோதின. பால் ஸ்டிர்லிங் (61), ராஸ் வைட்லி (44*) கைகொடுக்க, சதர்ன் பிரேவ் அணி 100 பந்தில் 5 விக்கெட்டுக்கு 168 ரன் குவித்தது. சவாலான இலக்கை விரட்டிய பர்மிங்காம் அணிக்கு லியாம் லிவிங்ஸ்டன் (46), கேப்டன் மொயீன் அலி (36) ஆறுதல் தந்தனர். பர்மிங்காம் அணி 100 பந்தில் 5 விக்கெட்டுக்கு 135 ரன் மட்டும் எடுத்து, 32 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. சதர்ன் பிரேவ் அணி கோப்பை வென்றது.

பெண்களுக்கான பைனலில் ஓவல் இன்விசிபில்ஸ் அணி (121/6, 100 பந்து) 48 ரன் வித்தியாசத்தில் சதர்ன் பிரேவ் அணியை (73/10, 98 பந்து) வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

 

கால்பந்து ஜாம்பவான் மரணம்

 

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரர் சையது ஷாஹித் ஹக்கிம் 82. ஐதராபாத்தில் பிறந்த இவர், 1960ல் நடந்த ரோம் ஒலிம்பிக்கில் பங்கேற்றார். டில்லியில் 1982ல் நடந்த ஆசிய விளையாட்டின் போது இந்திய அணியின் துணை பயிற்சியாளராக இருந்த இவர், பின் தலைமை பயிற்சியாளரானார். கடந்த 2017ல் இவருக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான தயான்சந்த் விருது வழங்கப்பட்டது. உடல் நலக்குறைவால் கர்நாடகா மாநிலம் குல்பர்கா நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். இவரது மறைவுக்கு அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Advertisement

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: