கோஹ்லி 23,000 ரன்கள்

Spread the love

லண்டன்: ஓவல் டெஸ்டில் பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் துவக்கிய கோஹ்லி சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வித கிரிக்கெட்டிலும் சேர்த்து 23,000 ரன்கள் என்ற மைல்கல்லை கடந்தார். 

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் மழை காரணமாக ‘டிரா’ ஆனது. அடுத்த இரு டெஸ்டில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற, தொடர் 1–1 என சமனில் உள்ளது. இரு அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட், லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் துவங்கியது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட், பீல்டிங் தேர்வு செய்தார். 

இந்திய அணிக்கு லோகேஷ் ராகுல் (17), ரோகித் சர்மா (11) ஜோடி துவக்கம் கொடுத்தது. புஜாரா (4) விரைவில் நடையை கட்டினார். ஆண்டர்சன் பந்தில் பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் துவக்கினார் இந்திய அணி கேப்டன் கோஹ்லி. இதையடுத்து  சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வித கிரிக்கெட்டிலும் சேர்த்து, அதிவேகமாக 23,000 ரன்கள் எடுத்த முதல் வீரர் ஆனார். இவர் 490 இன்னிங்சில் இந்த மைல்கல்லை எட்டினார். 

இந்தியாவின் சச்சின் (522 இன்னிங்ஸ்), பாண்டிங் (544, ஆஸி.,), காலிஸ் (551, தெ.ஆப்.,), சங்ககரா (568, இலங்கை), டிராவிட் (576, இந்தியா) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். 

* ஒட்டுமொத்தமாக கோஹ்லி, 96 டெஸ்டில் 7722 ரன், 254 ஒருநாள் போட்டிகளில் 12,169, 90 சர்வதேச ‘டுவென்டி–20’ல் 3159 என ஒட்டுமொத்தம் 23,049 ரன் எடுத்துள்ளார். 

* சர்வதேச அரங்கில் மூன்று வித கிரிக்கெட்டிலும் இணைந்து அதிக ரன் எடுத்த வீரர்களில் 7வது வீரர் ஆனார் கோஹ்லி.

இதில் ‘டாப்–7’ வீரர்கள் விபரம்

வீரர்/அணி போட்டி ரன்

சச்சின்/இந்தியா 664 34,357

சங்ககரா/இலங்கை 594 28,016

பாண்டிங்/ஆஸி., 560 27,483

ஜெயவர்தனா/இலங்கை 652 25,957

காலிஸ்/தெ.ஆப்., 519 25,534

டிராவிட்/இந்தியா 509 24,208

கோஹ்லி/இந்தியா 440 23,017

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: