கோவையில அடிக்கடி பிடிபடுது காரு… ஆட்டோவுல பணக் கடத்தல் ஜோரு!| Dinamalar

Spread the love


கோவை புறநகரில் இருக்கிற ஆட்டோ ஸ்டாண்ட் அது… அங்கே தான் இந்த விஷயத்தை,சுவராஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்தனர், சில ஆட்டோக்காரர்கள். ஒரு வார்த்தை நம் காதில் விழுந்ததும், மெதுவாக நடையின் வேகத்தை குறைத்து, நமது அலைபேசியில் யாரிடமோ பேசுவதை போல, அவர்கள் பேசுவதைக் கேட்கத் துவங்கினோம்.

latest tamil news

”கொடுமையா இருக்கு தம்பி….! டூ – வீலர்ல போன, கிராமத்து ஆசாரிகிட்டயிருந்து அஞ்சு பவுன் நகையைப் பறிச்சிட்டு, ‘அதைக்கொண்டு வா, இதைக்கொண்டு வா’ன்னு ஆபீசருங்க அலைக்கழிக்கிறாங்க. பாவம் அந்தாளுக்கு அவுங்க சொல்றது எதுவுமே புரியலை. ஆனா, ‘கவர்மென்ட் ஆபீசர்’க வண்டிகள்லயும், வேட்பாளர் வண்டிகள்லயுமே, பணத்தை பெட்டி பெட்டியாக் கொண்டு போயிட்டு இருக்காங்க!” ”அண்ணா! அதெல்லாம் இப்போ நடக்குறதில்லை. இப்பல்லாம், ‘டி போர்டு’ வண்டி, ‘ஓன்போர்டு’ கார்களை மட்டுமில்லாம வேட்பாளர் வண்டி, ஆபீசர்கள் வண்டினு எல்லாத்தையும், ‘செக்’ பண்றாங்க. டூ – வீலர்களையும் அப்பப்போ நிறுத்திப் பார்க்குறாங்க. ஆனா, ஆட்டோக்களை யாருமே, ‘செக்’ பண்றதில்லை.

”அதனால ஆட்டோவுலதான் இப்போ பணம் தாராளமாக் கொண்டு போறாங்க. அதுவும், ‘லேடீஸ்’களை வச்சுத்தான் கொண்டு போறாங்க!” இப்படிப் பேசிக்கொண்டிருந்தவர்கள் திடீரென சுதாரித்து, பேச்சை நிறுத்தி விட்டனர். அதன்பின் விசாரித்ததில், அதிர்ச்சியான தகவல் கிடைத்தது. கோவை மாவட்டத்தில் ஒரு முக்கியமான தொகுதியில், குறிப்பிட்ட, ஒரு கட்சியினர்தான் இந்த ஆட்டோ யுக்தியை புதிதாக அறிமுகம் செய்திருப்பதாகத் தெரியவந்தது.ஒவ்வொரு ஆட்டோவிலும், இரண்டு அல்லது மூன்று பெண்களை அனுப்பி, அவர்களிடம் புதிய ஜவுளிகள் வாங்கியது போன்று, இரண்டு மூன்று துணிக்கடை பைகளை கொடுத்து விடுகின்றனர். அவற்றில் புதிய சேலைகளும், ஆடைகளும் கூட இருக்கும். அதற்குள் பணமும் இருக்கும்.

latest tamil news

ஒரு பெண்ணுக்கு, 2 லட்சம், 3 லட்சம் ரூபாய் என்று கணக்கிட்டு, ஒவ்வொரு ஆட்டோவிலும், 10 லட்சம் ரூபாய் வரை கடத்தப்படுகிறது. அவர்கள் சொன்ன இடத்துக்கு அந்தப் பணத்தைக் கொண்டு போய் கொடுத்து விட்டால், அவர்களுக்கு லட்சத்துக்கு, 10 ஆயிரம் ரூபாய் வீதம்கமிஷன் தரப்படுகிறது. இதற்காகவே, 50க்கும் மேற்பட்ட நம்பிக்கைக்குரிய ஆட்களை கொண்டு, இந்த ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. அவர்களுக்கும், ஒரு நாளுக்கு சில ஆயிரம் ரூபாய் வாடகையாகத் தரப்படுகிறது என்றும், தகவல் தெரியவந்தது.

AdvertisementSource link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *