கோலி, தோனியைவிட கோடிகளில் சொத்து… ஆனால், 21 வயதில் கிரிக்கெட்டை விட்டே விலகியவரின் கதை தெரியுமா! | Why Aryaman Birla took Break from Cricket

Spread the love


இந்நிலையில்தான் 2019-ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் 2018 நவம்பரில் நடந்தது. இந்த ஏலத்துக்கு சில நாட்களுக்கு முன்னர்தான் ரஞ்சி கோப்பையில் சதம் அடித்திருந்தார் ஆர்யமான். 20 லட்சம் ரூபாய் அடிப்படைத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டவரை 30 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ். இந்த அணியின் முக்கிய ஸ்பான்சர் ஒரு சிமென்ட் நிறுவனம். இது பிர்லா குழும நிறுவனம் என்பதால்தான் ஆர்யமானை அணிக்குள் எடுத்திருக்கிறார்கள் என்கிற பேச்சுகள் அப்போது கிளம்பியது.

நரேந்திர மோடி மற்றும் தன் குடும்பத்தினருடன் ஆர்யமான்

நரேந்திர மோடி மற்றும் தன் குடும்பத்தினருடன் ஆர்யமான்

2019 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தாலும் ஒரு போட்டியில்கூட விளையாட இடம் கிடைக்காத ஆர்யமான், 2019 டிசம்பரில் கிரிக்கெட்டைவிட்டே விலகுவதாக அறிவித்தார்.

”ஒரு வலைக்குள் அடைபட்டுவிட்டதாக உணர்கிறேன். கிரிக்கெட் தொடர்பான விஷயங்கள் என்னைப் பதற்றத்துக்குள்ளாக்குகின்றன. மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. என்னால் முயன்றவரைப் போராடிப்பார்த்தேன். ஆனால், இப்போதைக்கு எல்லாவற்றையும்விட என்னுடைய மனநலனே முக்கியம் என்பதால் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வெடுக்கிறேன். நல்ல ஆரோக்கியத்துடன் மீண்டும் விளையாடவருவேன் என நம்புகிறேன்” என அப்போது அறிவித்திருந்தார் ஆர்யமான் பிர்லா.

ஓராண்டுக்கு மேலாகியும் அவர் இன்னும் கிரிக்கெட் பிட்சுக்குத் திரும்பவில்லை. தந்தையுடன் சேர்ந்து பிர்லா குழும தொழில்களில் தன்னை ஈடுபடுத்திவருகிறார் ஆர்யமான் விக்ரம் பிர்லா.

ஆர்யமான் பிர்லாவைப்போலவே இந்தாண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் எடுக்கப்பட்டிருக்கும் அர்ஜுன் டெண்டுல்கர் ஏராளமான விமர்சனங்களை எதிர்கொண்டுவருகிறார். ”என்னை விமர்சனம் செய்யுங்கள். ஆனால், என் மகனைத் தொந்தரவு செய்யாதீர்கள். அவனை விளையாட்டில் கவனம் செலுத்தவிடுங்கள்” எனத்தொடர்ந்து மகனுக்காக கெஞ்சிவருகிறார் சச்சின் டெண்டுல்கர்.THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *