கோலியின் பொற்காலம் முடிந்துவிட்டதா… 50 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் போனது ஏன்? | why virat kohli is struggling to score runs

Spread the love


மூன்றாவது டெஸ்ட்டிலாவது பெரிய இன்னிங்ஸ் ஆடுவார், சதம் கைகூடும் என நினைத்தவர்களுக்கு மற்றும் ஒருமுறை, ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. எந்த ஆண்டர்சனால் ஆட்டமிழந்து விடக்கூடாது என ரசிகர்கள் எதிர்பார்த்தார்களோ, அவர்கள் எதிர்பார்ப்பைப் பொய்யாக்கி, மீண்டும் 4-வது ஸ்டம்ப் லைனில் வந்த ஃபுல்லர் பந்தை, கவர் டிரைவ் ஆடியே தீருவேன் என்று வலுக்கட்டாயமாக ஷாட் ஆட முயல, பந்து மற்றும் ஒருமுறை பட்லரிடம் தஞ்சம் புகுந்தது.

மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பு, இங்கிலாந்து மைதானங்களில் பேட்டிங் ஆடும்போது, உங்கள் ஈகோவை ஒதுக்கிவைத்துவிட்டு விளையாட வேண்டும் என பத்திரிக்கையாளர்களிடம் கூறியவர், அதே ஈகோவினால் மற்றும் ஒருமுறை ஆட்டமிழந்து இருக்கிறார். மொத்தத்தில் கோலிக்கு எதிரி, கோலியாகவே இருக்கிறார். அவரின் கவர் டிரைவ் ஈகோ, அவரைத் தொடர்ந்து, அந்த ஷாட்டுக்குச் செல்லுமாறு தூண்டுகிறது. ஆனால் அந்த ஷாட் ஆடுவதற்கு ஏற்றாற்போல், தனது கால்களை Long stride ஆக வைக்காமலும், பேக் ஃபுட் பாயின்ட்டை நோக்கி இல்லாமல் கவர் திசையை நோக்கி இருக்குமாறும் ஆடி வருவதால், அவரது ஆட்டம், தொடர்ந்து ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது.

ஆஃப் ஸ்டம்ப் லைனில் வரும் பந்துகளுக்கு 2014-ம் ஆண்டு, 6.50 என மோசமான சராசரியை வைத்திருந்தவர், 2018-ம் ஆண்டு, யாரும் எதிர்பாராத வண்ணம் ஆடி, தனது சராசரியை, 159 எனக் கொண்டு வந்து வீழ்ந்த இடத்திலேயே வெகுண்டு எழுந்தார். ஆனால், 2021-ம் ஆண்டு, மீண்டும் அவரது ஆஃப் ஸ்டம்ப் சராசரி 9.50 என வந்து நின்று கோலி கரியரின் ஃபார்மையே பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது.

டெக்னிக்கல் தவறோடு, சதத்தை நெருங்க வேண்டுமென்ற மனதளவிலான பதற்றமும், 71-வது சதத்துக்கும் அவருக்கும் நடுவே நிற்கிறது. உண்மையில், ‘ஆல் டைம் கிரேட்’ பிளேயர்கள் எல்லோருக்குமே பலவீனங்கள் இருக்கும். அதைச் சரிசெய்துதான், ஒவ்வொரு சரிவிலிருந்தும் மீண்டு வருவார்கள். இதையே பலமுறை கோலியும் சந்தித்துள்ளார்.

சரித்திரம் திரும்பும் என்பதைப் போல், அதை மறுபடியும் கோலி நிகழ்த்தி, இன்னொரு ரவுண்ட் வந்தால், பல ரெக்கார்டுகள் உடைக்கப்படலாம். கோலியின் இன்னொரு அப்டேட்டட் வெர்ஷனைக் காணலாம். ஆனால் அது எப்போது உடைக்கப்படும், பழைய கோலியாக அவர் எப்போது திரும்பி வருவார் என்பதுதான் விடை தெரியாத கேள்வியாக உள்ளது.THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: