கோலியின் சைக்கிளில் ஏறிய வாத்தியார் புஜாரா… உருமாறிய டிராவிட் & லட்சுமண் கூட்டணி இதுதானா?! | kohli and pujara struggling to save india in leeds test

Spread the love

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்று முடிந்திருக்கிறது. முதல் இன்னிங்ஸில் மிக மோசமாக பேட்டிங் ஆடியிருந்த இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி வருகிறது. 215-2 என்ற நிலையில் ஸ்கோர் வலுவான நிலையில் உள்ளது. ஆனாலும் இந்தியா இன்னமும் கடக்க வேண்டிய தூரம் அதிகமாகவே இருக்கிறது. மூன்றாம் நாளில் நடந்த சில முக்கிய மொமன்ட்ஸ் இங்கே!

டெய்ல் எண்டர்களை விரட்டிய பௌலர்கள்!

இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 345 ரன்கள் முன்னிலை வகித்திருந்தது. பெரிய லீட் எடுத்த பிறகும் ஜோ ரூட் டிக்ளேர் கொடுக்கவில்லை. டெய்ல் எண்டர்கள் எவ்வளவு ஆடுகிறார்களோ ஆடட்டும். இனிமேல் வருவதெல்லாம் போனஸ் என்ற மனநிலையில் இருந்தார். ஆனால், இந்திய பௌலர்கள் இங்கிலாந்தின் டெய்ல் எணடர்களை பெரிதாக ஸ்கோர் செய்ய விடவில்லை. மூன்றாம் நாள் தொடக்கத்தில் ஓவர்டன் மட்டும் ஷமியின் ஓவரில் இரண்டு பவுண்டரிகளை அடித்தார். ஷமி பந்திலேயே அவர் அவுட் ஆக, ராபின்சன் பும்ராவின் பந்துவீச்சில் போல்டானார்.

ராகுலின் நிதானம்!

இந்த இங்கிலாந்து சீரிஸில் இந்தியாவின் பெரிய நம்பிக்கையாக இருப்பது ரோஹித்-ராகுல் ஓப்பனிங் கூட்டணியே. இருவருமே முதல் இரண்டு டெஸ்ட்களிலும் மிகச்சிறப்பாக ஆடியிருந்தனர். ஆனால், இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் கே.எல்.ராகுல் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்துக்கு பெட்டை விட்டு டக் அவுட் ஆகி வெளியேறியிருந்தார். ராகுல் மாதிரியான முழு ஃபார்மிலிருந்த ஒரு வீரரிடமிருந்து இப்படி ஒரு மோசமான டிஸ்மிசலை யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. 78-க்கு ஆல் அவுட் என்கிற இந்தியாவின் மோசமான வீழ்ச்சிக்கு தொடக்கமாக அமைந்திருந்தார் ராகுல். ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் ரோஹித்துடன் கூட்டணி போட்டு 19 ஓவர்கள் வரை க்ரீஸில் நின்றார். ரொம்பவே பொறுமையாக ஒவ்வொரு பந்தையும் முழுமையாக கவனித்து சிறப்பாக டிஃபன்ஸ் செய்தார்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: