கோலாகலமாகத் தொடங்கிய 30ஆவது தென்கிழக்காசிய விளையாட்டுகள்

Spread the love


30ஆவது தென்கிழக்காசிய விளையாட்டுகளின் தொடக்க விழா பிலிப்பீன்சின் புலாக்கான் மாநிலத்தில் இன்று நடைபெற்றது.

பிலிப்பீன் எரீனா விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கோலாகலமான கொண்டாட்டங்களில் அதிபர் ரொட்ரிகோ டுட்டார்ட்டே கலந்துகொண்டார்.

விளையாட்டுகளின் வரலாற்றில் முதல் முறையாகத் தொடக்க விழா உள்ளரங்கில் நடைபெற்றது.

அதில் இடம்பெறும் அங்கங்கள் பற்றிய விவரங்களை ஏற்பாட்டாளர்கள் முன்னதாக வெளியிடாததால், பார்வையாளர்களுக்கு நிகழ்ச்சி, இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.

இதற்கு முன் 2005இல் பிலிப்பீன்ஸ் போட்டிகளை ஏற்று நடத்தியது.

இம்முறை சாதனை அளவில் 56 விளையாட்டுகள் இடம்பெறுகின்றன.

தலைநகர் மணிலாவில் சுமார் 16,000 காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக, நியூ கிளார்க் சிட்டிவிளையாட்டரங்கில் தீபச்சுடரேற்றும் சடங்கு நடைபெற்றது.

பிலிப்பீன்சின் குத்துச்சண்டை வீரர்களான மேனி பக்கியாவ், நெஸ்தி பெட்டெக்கியோ இருவருக்கும் அதில் பங்குபெற வாய்ப்புக் கிட்டியது.

போட்டிகளை Toggle வழியாகவும் பார்க்கலாம்…

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *