கொரோனா வைரஸ் பரவியது எப்படி? – நிபுணர் குழு அறிக்கை | Experts explain how coronavirus spread around the world | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online

Spread the love


Experts-explain-how-coronavirus-spread-around-the-world

கொரோனா வைரஸ் சீன பரிசோதனை கூடத்தில் இருந்து கசியவில்லை என்றும், வவ்வாலில் இருந்து மற்றொரு விலங்கு மூலம் பரவியதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. வுகானில் உள்ள கடல் உணவு சந்தையில் இருந்து வைரஸ் பரவியதாக ஒரு தரப்பினரும், சீனாவில் பரிசோதனைக் கூடத்தில் செயற்கையாக உருவாக்கிய போது கசிந்ததாக மற்றொரு தரப்பினரும் கூறி வந்தனர். இதனையடுத்து கொரோனா பரவல் குறித்து கண்டறிய உலக சுகாதார நிறுவனம் நிபுணர் குழு ஒன்றை அமைத்தது. அந்த குழுவினர் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சீன விஞ்ஞானிகளுடன் சேர்ந்து உணவுச் சந்தை, ஆய்வுக்கூடம் ஆகிய இடங்களில் ஆய்வு நடத்தினர்.

image

ஆய்வுக்கு பிறகு அவர்கள் அளித்துள்ள அறிக்கையில், கொரோனா வவ்வாலில் இருந்து மற்றொரு விலங்கு வழியாக மனிதர்களுக்கு பரவியிருக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதே போல் வவ்வாலில் இருந்து நேரடியாக மனிதர்களுக்கு பரவியிருக்க சாத்தியம் உள்ளது என்றும் நிபுணர் குழு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், குளிரூட்டப்பட்ட உணவு மூலம் பரவியிருக்காது என்றும், பரிசோதனை கூடத்தில் இருந்து கசிய வாய்ப்பே இல்லை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: