பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன், மற்றொரு கொரோனா அலைக்கு எதிரான பாதுகாப்பு எவ்வளவு வலுவானது என்பது எங்களுக்கே தெரியாது என்று எச்சரித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் பிரித்தானியாவில் தற்போது முன்பு இருந்ததை விட சற்று குறைவாகியுள்ளது. அதன் காரணமாக அங்கு இன்று முதல், சில கட்டுப்பாடுகளில் தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இன்று பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் போரிஸ் ஜோன்சன், எங்கள் கோட்டைகள்(பிரித்தானியா) தற்போது எவ்வளவு வலியானதாக இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியாது.
எங்கங்கள் பாதுகாப்பு மற்றொரு அலைக்கு எதிராக வலுவானதாக இருக்க வேண்டும். என்ன நடக்கிறது என்பதை நாங்கள் பார்த்து கொண்டிருக்கிறோம்.
இதனால், தான் நான் மக்களை எச்சரிக்கையுடன் இருக்கும் படி வலியுறுத்துகிறேன். குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் என்ன செய்து வருகிறது என்பதை கவனித்து வருகிறோம்.
இருப்பினும், மக்கள் நீண்ட காலமாக பின்பற்றி வந்த கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றுமாறு வலியுறுத்துகிறேன்.
மேலும், ஒரு சிலர் தடுப்பூசி சலுகையை எடுத்துக் கொள்ள மாட்டார்கள், அவரகள் புதிய கொரோனா அலைகளால் பாதிக்கப்படலாம் என்று எச்சரிக்கும் போரிஸ் கட்டுப்பாடுகள் சற்று குறைந்துவிட்டது என்பதை நினைவுபடுத்தினார்.
தலைமை மருத்துவர் கிறிஸ் விட்டி, பிரித்தானியாவை பொறுத்தவரை, தடுப்பூசி என்பது சுவர் போன்றது. ஆனால் அது ஒரு முழுமையான சுவர் கிடையாது. இதில் ஒருவகையான கசிவு இருக்கிறது என்பதை மறைமுகமாக கூறினார்.
இதை போரிஸ் ஏற்று கொள்வது போன்று, மக்கள் ஒவ்வொருவரும் இப்போது இரண்டாவது தடுப்பூசியை பெறப்போகிறீர்கள்.
அந்த அணுகுமுறையில் நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம். இது தான் நாங்கள் கொரோனா வை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வழி, தற்போது கட்டுப்பாடுகள் சற்று குறைந்தாலும், மக்கள் கவனமுடன் இருப்பது மிகவும் முக்கியம் என்று கூறினார்.