கொரோனா கிருமிப்பரவலின் தொடக்கம் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையைச் சாடும் 14 நாடுகள்

Spread the love


கொரோனா கிருமிப்பரவலின் தொடக்கம் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையை 14 நாடுகள் சாடியிருக்கின்றன.

அமெரிக்கா, கனடா, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அந்த அறிக்கையைப் பற்றி குறைகூறின.

இவ்வாண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் உலகச் சுகாதார நிறுவனத்தின் விசாரணையாளர்கள், கிருமிப்பரவல் தொடங்கியதாக நம்பப்படும் சீனாவின் வூஹான் நகரில் 4 வார விசாரணை மேற்கொண்டனர்.

அவர்களும், சீன அறிவியல் அறிஞர்களும் இணைந்து அதன் தொடர்பில் இறுதி அறிக்கையை வெளியிட்டனர்.

கொரோனா கிருமி, வெளவால்களிடமிருந்து, மற்றொரு விலங்கு மூலம் மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

சீன ஆய்வுக் கூடத்தில் இருந்து அந்தக் கிருமி பரவியிருக்கக்கூடிய சாத்தியம் மிகக் குறைவே என்றும் அறிக்கை சுட்டியது.

ஆனால், விசாரணையாளர்கள் மிக விரைவில் முடிவெடுத்திருப்பதாக அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் கூறுகின்றன.

அது பற்றிய மேலும் விரிவான விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என உலகச் சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் கெப்ரியேஸஸ் (Tedros Ghebreyesus) கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆராய்ச்சி மேற்கொள்ள சீனா சென்ற உலகச் சுகாதார அமைப்பின் விசாரணையாளர்களிடமிருந்து, சீனா தகவல்களை மறைத்தது குறித்தும் அவர் சீனாவைச் சாடினார்.

விசாரணையாளர் குழுவை வழிநடத்திய டாக்டர் பீட்டர் பென் எம்பாரெக் (Peter Ben Embarek), சீனாவிடமிருந்து கிருமிப் பரவலின் தொடக்கம் குறித்து தகவல் பெறுவதில் சிரமத்தை எதிர்நோக்கியதாகக் கூறியிருக்கிறார்.

அரசியல் ரீதியான நெருக்கடியும் நிலவியதை அவர் சுட்டினார்.

இருப்பினும், அந்த இறுதி அறிக்கையில் இருந்து எவ்விதத் தகவலையும் அகற்றுவதற்கான நெருக்கதலைத் தாம் எதிர்நோக்கவில்லை என டாக்டர் எம்பாரெக் சொன்னார்.

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: