Spread the love
Images
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
தென் கொரியா உடனான தனது உலகக் கிண்ணக் காற்பந்துத் தகுதிச் சுற்று ஆட்டத்தை ஏற்று நடத்த வட கொரியா விருப்பம் தெரிவித்திருக்கிறது.
அந்தத் தகவலை ஆசியக் காற்பந்துச் சம்மேளனம் (Asian Football Confederation) நேற்று (ஆகஸ்ட் 3) தெரிவித்தது.
பியோங்யாங்கில் உள்ள விளையாட்டரங்கில் தென் கொரியாவுடன் மோத வட கொரியா ஆர்வம் காட்டியுள்ளது.
போட்டிக்கு அனுமதி வழங்கப்பட்டால் அது வரும் அக்டோபர் 15ஆம் தேதி பியோங்யாங்கில் இடம்பெறும்.
அப்படி பியோங்யாங்கில் போட்டி நடந்தால் அது வட கொரிய மண்ணில் கிட்டத்தட்ட 30ஆண்டுகளுக்குப் பிறகு தென் கொரியா களமிறங்கும் ஆட்டமாக இருக்கும்.
2023 பெண்கள் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளைக் கூட்டாக ஏற்று நடத்த இரு கொரியா நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன.