கொசுக்கள் பெருகியுள்ள இடங்களில் அரியவகை டெங்கி கண்டுபிடிப்பு

Spread the love

சிங்கப்பூரில் கொசுக்கள் பல்கிப் பெருகியுள்ள இரண்டு இடங்களில் DENV-3 என்னும் அரியவகை டெங்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வகை டெங்கிக் கிருமியின் பரவல், சிங்கப்பூரில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாதது என, தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்தது.

இந்த அரியவகைக் கிருமியை எதிர்த்துப் போராடும் தடுப்புசக்தி குறைவு.

எனவே, குடியிருப்பாளர்களிடையே இந்த வகை டெங்கி பரவும் சாத்தியம் அதிகம்.

சென்றமாத மத்தியிலிருந்து, ஒவ்வொரு வாரமும் நூற்றுக்கும் அதிகமான டெங்கிச் சம்பவங்கள் புகார் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டில், இதுவரை பதிவான மொத்த டெங்கிச் சம்பவங்களின் எண்ணிக்கை 4,000-ஐத் தாண்டிவிட்டது.

கடந்த ஈராண்டுகளில் பதிவான எண்ணிக்கையைக் காட்டிலும் அது கணிசமாகக் குறைவுதான்.^

கடந்த இரண்டு வாரங்களாக,ஃபுளோரன்ஸ் ரோட்டிலும் (Florence Road) ஹவ்காங் அவென்யூ 2-இலும் ( Hougang Avenue 2) கொசுக்கள் பெருகியுள்ள இடம், தொடர்ந்து விரிவடைந்து வருகிறது.

நேற்றைய நிலவரப்படி அது, 177 சம்பவங்களோடு ஆகப்பெரிய கொசு பரவும் இடமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வட்டாரத்தில், டெங்கி ஒழிப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: