கேரளா அணி சாம்பியன்: ‘ஐ–லீக்’ கால்பந்தில்…

Spread the love


கோல்கட்டா: ‘ஐ–லீக்’ கால்பந்து தொடரில் கேரளா அணி முதன்முறையாக கோப்பை வென்றது.

கோல்கட்டாவில், 14வது ‘ஐ–லீக்’ கால்பந்து தொடர் நடந்தது. இதில் சென்னை சிட்டி, கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட 11 அணிகள் பங்கேற்றன. கடைசி சுற்று லீக் போட்டியில் சர்ச்சில் பிரதர்ஸ் அணி 3–2 என, பஞ்சாப் அணியை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் கோகுலம் கேரளா அணி 4–1 என, ‘டிடிம் ரோடு அத்லெடிக் யூனியன்’ (டி.ஆர்.ஏ.யு.,) அணியை வீழ்த்தியது.

லீக் சுற்றின் முடிவில் கேரளா (9 வெற்றி, 2 ‘டிரா’, 4 தோல்வி), சர்ச்சில் பிரதர்ஸ் (8 வெற்றி, 5 ‘டிரா’, 2 தோல்வி) அணிகள் தலா 29 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டிருந்தன. பின், கோல் அடிப்படையில் சர்ச்சில் பிரதர்ஸ் அணியை (+5) முந்திய கேரளா அணி (+14) முதலிடம் பிடித்து முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கேரளா அணிக்கு கோப்பையுடன், ரூ. ஒரு கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

Advertisement





THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *