கெட்ட பையன் சார் இந்த கங்குலி… தன்னிகரற்ற தலைவனின் கதை! | Sourav Ganguly’s leadership and his unique qualities

Spread the love

பொதுவாக, எந்த ஒரு கிரிக்கெட்டரின் கரியரை எடுத்துப் பார்த்தாலும், அதில் அவர்கள் எட்டிய உயரங்களும், சந்தித்த சரிவுகளும் குறிக்கப்பட்டிருக்கும். ஆனால், கங்குலியின் சுயசரிதையில்தான், இந்தியக் கிரிக்கெட்டின் எழுச்சியே எழுதப்பட்டிருக்கிறது. அதோடு பல கிரிக்கெட்டர்களின் சுயசரிதைகளில் தவறாது இடம்பெற்றுள்ள ஒற்றைப் பெயரும், அவருடையதே. இந்தியக் கிரிக்கெட்டின் அணுகுமுறையையே மாற்றிய அவர், அதற்குப் புது முகத்தையும், முகவரியையும் கொடுத்தார்.

ஒரே ஒரு போட்டிக்கான வியூகம் அல்ல, அவரது கேம் பிளான்கள். அடுத்த 10 ஆண்டுகளுக்குமான திட்டமிடலாக, தொலைநோக்குப் பார்வை உடையதாகத்தான், அவரது ஒவ்வொரு நகர்வுமே இருந்தது. ஹர்பஜனை, பௌலிங் படையில் இணைத்தது, கும்ப்ளே இல்லாமல், ஆஸ்திரலியாவுடனான தொடரில் தொடரவே மாட்டேன் என்பதில் பிடிவாதமாக இருந்தது, உலகக்கோப்பை முடியும் வரையாவது, அணியின் நலனுக்காக பௌலராகத் தொடருங்கள் என ஜவகல் ஸ்ரீநாத்திடம் பேசிச் சம்மதிக்க வைத்தது என அவர் எடுத்த ஒவ்வொரு முடிவும், இந்தியக் கணக்கில், வெற்றியை மட்டுமே பதிவேற்றம் செய்து கொண்டிருந்தது.

கங்குலி எனும் தன்னிகரற்ற தலைவனின் ஸ்பெஷல் மொமன்ட்ஸை வீடியோ வடிவில் காண…

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: