குழந்தையின் குதூகலத்தில் 80ஐ தாண்டிய வாக்காளர்கள்!| Dinamalar

Spread the love


‘முடியுமோ… முடியாதோனு கவலையா இருந்தேன்… இப்ப என்னோட கவலையே தீர்ந்துச்சுப்பா…’ என, சின்னக் குழந்தை போல், ‘ஹேப்பி’ ஆகிவிட்டார் அந்த, 90 வயது பெண்மணி.தேர்தல் கமிஷன், 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளரின் விருப்பத்தை கேட்டு, விருப்பம்இருந்தால் தபால் ஓட்டு போடும் வாய்ப்பை வழங்கியுள்ளது.

latest tamil news

திருப்பூர் மாவட்டத்தில், 3,871 வாக்காளரை தேடி, 1,085 பேர் அடங்கிய, 155 ‘டீம்’ களத்தில்இறங்கியுள்ளது. திருப்பூர் வடக்கு தொகுதியில், முத்துநகர் பகுதியில், 90 வயதான மூதாட்டிக்கு, தபால் ஓட்டு வீடு தேடிச் சென்றதால், எல்லையில்லா ஆனந்தம் தாண்டவமாடியது. ‘தேர்தல் அவசரம்’ ஸ்டிக்கர் ஒட்டிய வாகனம், வீட்டின் முன் நின்றதும், குடும்பத்தினர் வரவேற்றனர்.கட்டிலில் அமர்ந்திருந்த மூதாட்டிக்கு, தேர்தல் அலுவலர்களை கண்டதும், அவ்வளவு சிரிப்பு. ‘கையெழுத்து போடுவீங்களா…?’ என, அலுவலர்கள் சந்தேகமாக கேட்டபோது… ”ஓ…மீனாட்சினு கையெழுத்து போடுவேன்…” என்றவர் தட்டுத்தடுமாறி, கையெழுத்து போட்டார்.

latest tamil news

தடுப்பு அட்டையை வைத்ததும், ”ரொம்பா இருட்டா இருக்கே…” என, தனது வீட்டாரை பார்த்து கேட்டார். உடனடியாக ஒயர் எடுத்து வந்து, கட்டில் அருகே, ‘எல்.இ.டி., லைட்’ போட்டனர்.தபால் ஓட்டுச்சீட்டை கையில் வாங்கியதும், தனது அருகில் யாரும் இல்லை என்பதை சுற்றிலும் பார்த்து உறுதி செய்துவிட்டு, வேகமாக, ‘டிக்’ அடித்து மடித்து கொடுத்தார். ”காமராஜர் காலத்துல இருந்தே ஓட்டுப்போடறேன்… நடக்க முடியாம போனதால, ஸ்கூலுக்கு போயிஓட்டுப்போட முடியுமானு, ரொம்ப கவலையா இருந்தேன்… மகராசனுங்க வந்து கவலையபோக்கிட்டாங்க… என்னோட கவலையே தீர்ந்துபோச்சு,” என, குழந்தை போல் மகிழ்ச்சியடைந்து, மெதுவாக எழுந்து நின்று நன்றி கூறினார். ஜனநாயக கடமையாற்றுவதில் பக்கபலமாக இருந்துள்ளதாக, அலுவலர்கள் பெருமிதத்துடன் காரில் அடுத்த இடம் நோக்கி புறப்பட்டு சென்றனர்.

AdvertisementSource link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *