குளிர்பதனப் பெட்டியில் இறைச்சி எவ்வளவு நாட்கள் தாங்கும்?

Spread the loveImages

  • meat

    படம்: Pixabay 

ஒவ்வொரு வகை உணவும் குளிர்பதனப் பெட்டியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தான் தாங்கும். அதன்பின் அது கெட்டுப்போகும் வாய்ப்பு அதிகம்.

அப்படிப்பட்ட உணவுவகைகளில் இறைச்சியும் ஒன்று. கெட்டுப்போன இறைச்சியை உண்டால் அது உடல்நலத்தை பெருமளவில் பாதிக்கும் சாத்தியமும் உண்டு.

கொத்துக் கறி:

இரண்டு நாட்களுக்கு மேல் குளிர்பதனப் பெட்டியில் கொத்துக் கறி இருந்தால் அதை தவிர்ப்பது நல்லது. பதப்படுத்திய கொத்துக் கறியை 3 அல்லது 4 மாதங்கள் வரை குளிர்பதனப் பெட்டியில் வைத்திருக்கலாம்.

பதப்படுத்தப்படாத கோழி:

இவ்வகை இறைச்சி இரண்டு நாட்கள் வரை குளிர்பதனப் பெட்டியில் வைத்திருக்கலாம்.

சிவப்பு இறைச்சி:

சிவப்பு இறைச்சியை 5 நாட்கள் வரை குளிர்பதனப் பெட்டியில் வைத்திருக்கலாம். பதப்படுத்திய இறைச்சியை 4 முதல் 12 மாதம் வரை வைத்திருக்கலாம். சமைத்த இறைச்சி 3 நாட்கள் வரை குளிர்பதனப் பெட்டியில் கெடாமல் இருக்குமாம்.

ஹாட் டாங் (HOT DOG):

இவ்வகை இறைச்சியை இரண்டு வாரங்களுக்கு மேல் குளிர்பதனப் பெட்டியில் வைத்திருக்கக்கூடாது. திறக்கப்பட்ட ஹாட் டாங் பொட்டலங்கள் 5 நாட்களுக்கு மேல் இருந்தால் சாப்பிட வேண்டாம்.

முட்டை வகைள்:

சமைக்கப்படாத முட்டைகள் குளிர்பதனப் பெட்டியில் சில மாதம் வரை தாக்குப்பிடிக்கும், ஆனால் சமைத்த முட்டைகள் ஒரு வாரத்திற்கு மேலாக இருந்தால் அவற்றை உண்ணக் கூடாது.

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *