குற்றாலீஸ்வரன் இஸ் பேக்… மீண்டும் விளையாட்டுக் களத்தில் நெய்தலின் நாயகன்! என்ன பிளான்? #Exclusive

Spread the love


25 ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு தமிழக வீட்டிலும் உச்சரிக்கப்பட்ட பெயர். தங்கள் பிள்ளைகளுக்கு ஒவ்வொரு பெற்றோரும் காட்டிய ரோல் மாடல் இவர். 13 வயதில் பிரிட்டிஷ் கால்வாயைக் கடந்து ஒட்டுமொத உலகின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். ஒரே ஆண்டில் 6 கால்வாய்களைக் கடந்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார். இத்தாலி நீச்சல் பயிற்சியாளர் ஒருவர் இவரைப் பார்த்து வியந்து, “உனக்கான அத்தனை வசதிகளையும் செய்துகொடுக்கிறோம். இத்தாலிக்காக விளையாடு” என்று சொல்லியபோது, அதைப் புறக்கணித்தவர். மிக இளம் வயதில் அர்ஜுனா விருது வென்றவர் என்ற சாதனையைப் படைத்தவர். ஆனால், அந்த விருது வாங்கிய ஒரே ஆண்டில் நீச்சலை விட்டு வெளியேறினார். ஏன்?

பெரும்பாலானவர்களைப்போல் அசோஷியேஷன்களையோ, அரசாங்கங்களையோ இவர் குறைசொல்லவில்லை. தான் வெளியேற யாரையும் கைகாட்டவில்லை. உண்மை என்னவென்று அந்த 17 வயதில் உணர்ந்திருக்கிறார். அதை சரியாகச் சொல்கிறார். அப்படி அவரை அன்று வெளியேறவைத்த காரணம்தான் இப்போது அவரை மீண்டும் விளையாட்டு அரங்கில் கால்பதிக்க வைத்திருக்கிறது. அது என்ன? அதில் இவர் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறார்? இந்த எக்ஸ்க்ளூசிவ் வீடியோவில்!THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: