குடும்பத் தகராறு: மனைவியைக் கொலை செய்து கணவர் தற்கொலை | Husband murdered wife in dharmapuri

Spread the love

தருமபுரியில் குடும்பத் தகராறில் மனைவியைக் கொலை செய்துவிட்டு, கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

தருமபுரி அடுத்த பிடமனேரி கோவிந்த தாஸ் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (37). இவர் மருந்து விற்பனைப் பிரதிநிதியாகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி திவ்யா வயது (32). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன் – மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று (மார்ச் 7) இரவு கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ராஜ்குமார் தன் மனைவி திவ்யாவைக் கொலை செய்துள்ளார். பின்னர் தன் தாய்க்கு போன் செய்து, தன் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். பின்னர், வீட்டிலேயே தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து, தகவல் அறிந்த தருமபுரி நகரக் காவல்துறையினர் இருவரது சடலங்களையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: