குசால் பெரேரா தேர்வு: இலங்கை ‘உலக’ அணி அறிவிப்பு

Spread the love

கொழும்பு: ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்கான இலங்கை அணியில், காயத்தில் இருந்து மீண்ட குசால் பெரேரா தேர்வானார்.

ஐ.சி.சி., சார்பில் ‘டுவென்டி–20’ உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக். 17ல் எமிரேட்ஸ், ஓமனில் துவங்குகிறது. இதற்கான 15 பேர் கொண்ட இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது. இதில், 6 பேட்ஸ்மேன், 5 ‘ஆல்–ரவுண்டர்’, 4 பவுலர்கள் இடம் பெற்றுள்ளனர்.

சமீபத்தில் இங்கிலாந்தில் கொரோனா பாதுகாப்பு வளையத்தை மீறியதால் தடை விதிக்கப்பட்ட நிரோஷன் டிக்வெல்லா, குசால் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலாகாவுக்கு இடம் கிடைக்கவில்லை. காயத்தில் இருந்து மீண்ட விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குசால் பெரேரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். வேகப்பந்துவீச்சாளர் நுவன் பிரதீப், இளம் ‘சுழல்’ வீரர் மஹீஷ் தீக்சனா, பிரவீன் ஜெயவிக்ரமா உள்ளிட்டோர் தேர்வாகினர். மாற்று வீரராக அகிலா தனஞ்செயா வாய்ப்பு பெற்றுள்ளார். கேப்டனாக தசுன் ஷனகா நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இலங்கை அணி: தசுன் ஷனகா (கேப்டன்), தனஞ்செயா டி சில்வா, குசால் பெரேரா, தினேஷ் சண்டிமால், அவிக்சா பெர்ணான்டோ, பானுகா ராஜபக்சே, சரித் அசலங்கா, வனிந்து ஹசரங்கா, கமிந்து மெண்டிஸ், சமிகா கருணாரத்னே, நுவன் பிரதீப், துஷ்மந்தா சமீரா, பிரவீன் ஜெயவிக்ரமா, லஹிரு மதுஷனகா, மஹீஷ் தீக்சனா.

மாற்று வீரர்கள்: லஹிரு குமரா, பினுரா பெர்ணான்டோ, அகிலா தனஞ்செயா, புலினா தரங்கா.

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: