கிவிட்டோவா தோல்வி

Spread the love

மான்ட்ரியல்: மான்ட்ரியல் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கிவிட்டோவா தோல்வியடைந்தார்.

கனடாவின் மான்ட்ரியலில் பெண்களுக்கான ‘டபிள்யு.டி.ஏ.,’ டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவா, இத்தாலியின் கமிலா ஜார்ஜியை சந்தித்தார். இதன் முதல் செட்டை கிவிட்டோவா 4–6 என இழந்தார். 

அடுத்த செட்டிலும் ஏமாற்றிய இவர் 4–6 என கோட்டை விட்டார். முடிவில் கிவிட்டோவா 4–6, 4–6 என்ற நேர் செட்கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். 

மற்றொரு போட்டியில் செக் குடியரசின் கரோலினா பிலிஸ்கோவா, அமெரிக்காவின் அனிசிமோவாவை 6–1, 7–6 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: