கிளிநொச்சியில் குடும்பத் தகராறால் ஏற்பட்ட விபரீதம்; கணவன் மனைவி சடலமாக

Spread the love


கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிவபுரம் கிராமத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் தனது மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

குடும்ப தகராறு காரணமாக குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் தனது மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கலாம் என கூறப்படும் அதேவேளை, சேலையில் தூக்கிட்டு அவரும் தற்கொலை செய்துள்ளார் எனவும் அயலவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இச் சம்பவத்தில் 38 வயதுடைய வேலாயுதம் சிவஞானம் என்பவரும் அவரது மனைவியான 36 வயதுடைய சிவஞானம் குகனேஸ்வரி என்வரும் உயிரிழந்துள்ளனர்.

இவர்களுக்கு 16 வயதில் மகளும், 13 மற்றும் 06 வயதில் இரணடு மகன்களும் உள்ளனர்.

இவர்களின் மூன்று பிள்ளைகளும் நிர்கதிக்குள்ளாகியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் பொலீஸ் மேதிலக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *