கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

Spread the love

கிளிநொச்சி ஏ-9 வீதியின் கந்தசுவாமி கோயில் முன்பாக மாலை 5 மணியளவில் இடம்பெற்ற வீதி  விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

ஏ-9 வீதி வழியாக பரந்தன்  நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியால் நடந்து சென்றவரை மோதித் தள்ளி விபத்துக்குள்ளானது.

வீதியில் பாதசாரியாக பயணித்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிசார் குறிப்பிடுகின்றனர். 

உயிரிழந்தவர் கிளிநொச்சி விவேகாநந்தாநகர் பகுதியை சேர்ந்த செல்லப்பா சந்திரகுமார் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

இதேவேளை காயமடைந்த மற்றைய நபர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.  

விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *