கிறிஸ்டியானோ ரொனால்டோ Manchester United அணியில் சேருவதற்கான ஒப்பந்தம் நிறைவு

Spread the love



Images

  • ronaldo (1)

    (படம்: Rueters)

உலகப் புகழ்பெற்ற காற்பந்தாட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo), Manchester United காற்பந்து அணியில் சேருவதற்கான ஒப்பந்தம் நிறைவடைந்துள்ளது.

இதற்கு முன்னதாக, அவர் Juventus அணியில் விளையாடி வந்தார்.

அந்த ஈராண்டு ஒப்பந்தம் குறித்து, Manchester United அணி சென்ற வாரம் அறிவித்திருந்தது.

ரொனால்டோ, மருத்துவச் சோதனையை முடித்து, விசா பெற்றதை அடுத்து, ஒப்பந்தம் நிறைவடைந்துள்ளது.

அவர் அணி மாறுவதற்கான கட்டணம் சுமார் 17 மில்லியன் டாலர்.

Manchester United அணிக்காக அவர் அடுத்த மாதம் 11ஆம் தேதி களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரொனால்டோ, 2003லிருந்து 2009ஆம் ஆண்டு வரை Manchester United அணிக்கு விளையாடினார்.

2018ஆம் ஆண்டில், 100 மில்லியன் யூரோ மதிப்பிலான ஒப்பந்தத்தில், அவர் Real Madrid அணியிலிருந்து Juventus அணிக்கு மாறினார்.

-Reuters





THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: